Categories
மாநில செய்திகள்

2047-ஆண்டில் உலகை வழி நடத்தும் இந்தியா…. கவர்னர் நம்பிக்கை….!!!!

இந்தியாவை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என கவர்னர் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனியார்  கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர்  கலந்து கொண்டார். இதனையடுத்த அவர் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்த  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது. நமது இந்திய நாட்டை படைப்பதற்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலக அளவில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. தற்போது உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழும் இந்தியாவை  மாணவர்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம். மேலும் உலக நாடுகள் இந்தியாவை வியந்து பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் வருகின்ற 247 ஆம் ஆண்டில் அனைத்து துறையிலும் இந்தியா முதன்மை பெற்று உலகை வழி நடத்தும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |