Categories
உலக செய்திகள்

205 டாலர் பில்லுக்கு…. “5000 டாலர் டிப்ஸ்” வழங்கிய வாடிக்கையாளர்…. மகிழ்ந்த செவிலியர்…!!

 உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் ஊழியருக்கு 5000 டாலர் டிப்ஸ் வழங்கியது பாராட்டுக்களை பெற்றுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள இத்தாலிய உணவகம் Anthony”s At paxon . இவ்வுணவகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றில் செவிலியராக படித்துக்கொண்டே  ஊழியராக வேலை செய்து வருபவர்  ஏஞ்சலோ. இவர்  இந்த உணவகத்திற்கு  சாப்பிட வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு  205 டாலருக்கான  பில்லை  கொடுத்துள்ளார். ஆனால் அவர் 5,000 டாலரை டிப்ஸ் என்று ஏஞ்சலோவிடம்  வழங்கியுள்ளார்.

இதையடுத்து இவ்வுணவகம் அவர் பில்  கொடுத்தற்கான ரசீதை புகைப்படம் எடுத்து பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளது. இப்பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த உணவகம் பதிவிட்டுள்ள படத்தின் கீழ் குறிப்பிட்டுள்ளதாவது, “நன்றி என்று கூறுவதை விட எங்களிடம் வேறு வார்த்தைகள் இல்லை. எங்கள் ஊழியர்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு நம்ப முடியாதது நன்றி நன்றி!

எங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களை கொடுக்க உதவியாக இருந்தத‌ற்கு நன்றி!  நாங்கள் அனைவரும் உங்களை விரும்புகிறோம்! பாராட்டுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர் . இவர் வழங்கிய டிப்ஸ் பற்றி ஏஞ்சலோ கூறியதாவது, “நான் இருப்பதை கொண்டு மகிழ்ச்சி அடைபவள்  இதை என்னால் நம்ப முடியவில்லை நான் இந்த பணத்தை கல்லூரி செலவு போக மீதி உள்ளதை மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்துவேன்” என்றார்.

Categories

Tech |