Categories
தேசிய செய்திகள்

205 MLA-க்களுக்கு குற்ற பின்னணி…. வெளியான அதிர்ச்சி தகவல்……!!!!!!

உத்திரபிரதேசத்தில்  7 கட்டங்களாக நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10ம் தேதி எண்ணப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 403 புதிய எம்.எல்.ஏ.க்களின் பின்னணி விபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் புதிய எம்எல்ஏ-க்கள் பின்னணி குறித்து ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ள தகவல்களில் இருப்பதாவது.

# புதிய எம்எல்ஏ-க்களில் 91 சதவீதத்தினர் (எண்ணிக்கையில் 366 பேர்) கோடீஸ்வரர்கள் ஆவார்கள். (சென்ற 2017 ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 322 ஆகும்.) புதிய எம்எல்ஏ-க்களில் பா.ஜ.க.வில் 233 பேர், சமாஜ்வாடியில் 100 பேர், அப்னாதளத்தில் 9 பேர், ராஷ்டிரிய லோக்தளத்தில் 7 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.
# புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள உத்திரபிரதேசம் சட்டசபை உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 8.06 கோடி ஆகும்.
# பாஜக எம்.எல்.ஏ.க்கள் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 8.14 கோடி, சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 7.39 கோடி, அப்னாதளம் எம்.எல்.ஏ.க்கள் சராசரி சொத்து மதிப்பு ரூ.7.13 கோடி ஆகும்.
# புதிய எம்.எல்.ஏ.க்கள் 403 நபர்களில் 51 சதவீதத்தினர், அதாவது 205 பேர் கிரிமினல் எனும் குற்ற பின்னணி கொண்டவர்கள் ஆவார்கள். சென்ற 2017ல் இந்த எண்ணிக்கையானது 143 ஆக (36 சதவீதம்) இருந்தது. இம்முறை கிரிமினல் பின்னணி கொண்டவர்களுக்கு மக்கள் அதிகளவில் வாய்ப்பு தந்திருப்பது நிரூபணமாகி இருக்கிறது. குறிப்பாக 39 சதவீத எம்.எல்.ஏ.க்கள் அதாவது, 158 பேர் தங்கள் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். கடந்த 2017ல் இந்த எண்ணிக்கையானது 26 சதவீதமாக (107 பேர்) இருந்தது.
# பாஜக-வில் 111 எம்.எல்.ஏ.க்கள், சமாஜ்வாடியில் 71 எம்.எல்.ஏ.க்கள், ராஷ்டிரிய லோக்தளத்தில் 7 எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல்பின்னணி கொண்டவர்கள் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |