Categories
உலக செய்திகள்

20,80,00,000 மக்களா…? ஐநாவின் பரபரப்பு அறிக்கை…. ஷாக் ஆன உலக நாடுகள் ..!!

கொரோனா வைரஸால் லத்தின் அமெரிக்கா கரீபியன் பிரதேசம் முழுவதும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட லத்தீன் அமெரிக்கா, கரீபியன் பிரதேசத்தில் 208 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையில் தள்ளப்பட்டதாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐநாவின் பொருளாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 30.5 விழுக்காட்டிலிருந்து 33.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது எனவும், 12.5 சதவீத மக்களுக்கு உண்ண உணவு கூட கிடைக்கப் பெறாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் பரவிவரும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 28 சதவீதத்தினர் லத்தீன் அமெரிக்கா, கரீபியன் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் அடிக் கோடிட்டு காட்டியுள்ளது. உலக மக்கள் தொகையில் 8.4 விழுக்காடு மக்கள் லத்தீன் அமெரிக்கா கரீபியன் பகுதியில் வேலை இழந்துள்ளதாகவும், அவர்களின் சமத்துவமின்மை மிகவும் மோசமடைந்து வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளது. வறுமையால் பாதிக்கப்பட்டவர்களின் விழுக்காடு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |