தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ,
எழுந்ததும் கைகளை இருபது வினாடிகளுக்கு குறையாமல் சோப்பினால் நன்கு கழுவிய பின்னரே முகத்தை கழுவ வேண்டும். ஒவ்வொரு முறை கை கழுவும் போதும் 20 வினாடிகள் கை கழுவுதல் அவசியம். கழிவறை செல்லும் போது கண்டிப்பாக கைகளை சோப்பினால் கழுவிய பின்னரே ஆசனவாயை கழுவவேண்டும். கழிவறையில் நிரந்தரமாக சோப்பு வைத்திருப்பது நல்லது.