அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் மழைநீர் வடிகால் குழாயில் 20 நாட்களுக்கு மேலாக தவித்திருந்த பெண்ணை தீயணைப்பு வீரர்களால் உயிருடன் மீக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் புளோரிடாவில் என்ற மகாணத்தில் லிண்ட்சே கென்னடி(43) என்பவர் வசித்து வருகிறார். அவர் கடந்த மார்ச் 3ஆம் தேதி கால்வாய் ஒன்றில் நீந்துவதற்காக சென்றுள்ளார் . அப்போது அந்த கால்வாய்க்குள் சுரங்கப்பாதை ஒன்று இருந்துள்ளது. அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் சென்றுள்ளர். ஆனால் அந்த சுரங்கப் பாதையில் இருந்து திரும்பி வர அவருக்கு வழி தெரியவில்லை. அதனால் அந்த சுரங்கப்பாதை வழியாகவே பாதாள சாக்கடை ஒன்றிற்க்குள் சென்றுள்ளார். அதில் அவர் 20 நாட்கள் மேலாக இருந்துள்ளார். அதன் பிறகு திரும்பி வெளியே போக வழியை தேடி கடைசியாக ஒரு இடத்தில் வெளிச்சம் வருவதை கண்டு பிடித்துஅங்கு சென்று அமர்ந்துகொண்டார்.
அதன் பிறகு அது மழைநீரை சேமிக்கும் வடிகுழாய் என்பதை தெரிந்த கொண்ட அவர் இங்கிருந்து சத்தம் போட்டால் யாருக்காவது கேட்கும் என்று நினைத்துள்ளார். அதன்பிறகு அந்த வடிகுழாய் உள்ள சாலையோர வழியாக ஒருவர் நடந்து செல்வது போல் அவருக்கு சத்தம் கேட்டு உள்ளது. அதனால் உடனடியாக அவர் சத்தமிட்டார் . அந்த சத்தத்தை கேட்ட நபர் வடிகுழாய் உள்ளே எட்டிப் பார்த்தார். அங்கு பெண் ஒருவர் சிக்கி தவித்து கொண்டிருப்பதை கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . அந்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு வந்த பார்த்த தீயணைப்பு வீரர்கள் பெண் ஒருவர் வடிகுழாயில் சிக்கி தவிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வெகு நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பெண்ணை நிர்வாண நிலையில் உயிருடன் பத்திரமாக மீட்டனர். அதன்பிறகு அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.இதனையடுத்து மழைநீர் வடி குழாயில் பூனை மற்றும் நாய் போன்ற விலங்குகளை தான் மீட்பது உண்டு. ஆனால் நீங்கள் எப்படி மழைநீர் வடிகுழாய் மாட்டிக் கொண்டீர்கள் என்று தீயணைப்பு வீரர்கள் அந்த பெண்ணிடம் கேட்டு உள்ளனர். அதற்கு அந்த பெண் கூறிய பதிலை கேட்டு அனைவரும் அதிர்ச்ச்சி அடைந்தனர் .