இந்த ஆண்டு 20க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் வரை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் பணியை இஸ்ரோ நிறுத்தி வைத்திருந்தது. இந்தாண்டு பல செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விண்வெளி ஆராய்ச்சியில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நமது விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இஸ்ரோ சார்பில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக திட்டமிட்ட பல செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2 ஏவுகணை மூலம் செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.
தற்போது நிலுவையில் இருக்கும் சந்திராயன்-3, ஆதித்யா எல்-1 மற்றும் ககன்யான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும். செயற்கைக்கோள்கள் செலுத்தும் பணி நிறுத்தப்பட்டு இருந்தாலும் அவற்றை ஆராய்ச்சி செய்யும் பணிகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதனால் 2021 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்கு புதிய மையில் கல்லாக அமையும் என்று கூறினார்.