இன்றைய தினம் : 2019 டிசம்பர் 20
கிரிகோரியன் ஆண்டு : 354_ஆம் நாளாகும்.
நெட்டாண்டு : 355_ஆம் நாள்
ஆண்டு முடிவிற்கு : 11 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்:
69 – நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெசுப்பாசியான் உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு உரோம் நகரை அடைந்தான்.
217 – முதலாம் கலிஸ்டசு 16-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் உடனடியாகவே இப்போலிட்டசு எதிர்-திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டார்.
1192 – மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் இளவரசன் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான்.
1334 – பன்னிரண்டாம் பெனடிக்ட்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1606 – வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.
1803 – பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
1808 – இலண்டனில் கோவெண்ட் பூங்கா நாடக அரங்கு தீக்கிரையானது.
1832 – போக்லாந்து தீவுகளைக் கைப்பற்றும் பொருட்டு கப்டன் ஓன்சுலோ தலைமையில் பிரித்தானியப் படைக்கப்பல் எமொண்ட் துறைமுகத்தை வந்தடைந்தது.
1844 – இலங்கையில் அடிமைகளைப் பணிக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.[1]
1860 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது.
1915 – முதலாம் உலகப் போர்: கடைசி ஆத்திரேலியப் படையினர் கலிப்பொலியில் இருந்து வெளியேறினர்.
1917 – சோவியத் ஒன்றியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை “சேக்கா” அமைக்கப்பட்டது.
1924 – இட்லர் லான்ட்சுபெர்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தன்னார்வப் படை “பறக்கும் புலிகள்” சீனாவில் குன்மிங் நகரில் முதலாவது சமரை நிகழ்த்தியது.
1942 – இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா சப்பானியர்களின் வான் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.
1943 – பொலிவியாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1948 – புதிதாக உருவாக்கப்பட்ட இந்தோனேசியக் குடியரசின் தற்காலிகத் தலைநகர் யோக்யகர்த்தாவை இடச்சுப் படைகள் கைப்பற்றின.
1951 – அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக அமெரிக்காவில் ஐடஹோ மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது.
1952 – ஐக்கிய அமெரிக்க வான்படை விமானம் வாசிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் உயிரிழந்தனர்.
1955 – கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.
1957 – போயிங் 707 விமானம் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.
1971 – எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தன்னார்வ அமைப்பு பாரிசு நகரில் தொடங்கப்பட்டது.
1973 – எசுப்பானியப் பிரதமர் “லூயிஸ் கரேரோ பிளாங்கோ” மத்ரித் நகரில் வாகனக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
1984 – இங்கிலாந்தில் பெனைன்சு மலைத்தொடர் சுரங்கத் தொடருந்துப் பாதையில் 1 மில்லியன் பெற்றோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
1985 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் உலக இளையோர் நாளை ஆரம்பித்து வைத்தார்.
1987 – பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 (அதிகாரபூர்வமாக 1,749) பேர் உயிரிழந்தனர்.
1988 – போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கையெழுத்திடப்பட்டது.
1989 – பனாமாவின் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.
1995 – நேட்டோ பொசுனியாவில் அமைதி காக்கும் பணியைத் தொடங்கியது.
1995 – அமெரிக்க போயிங் விமானம் ஒன்று கொலம்பியாவில் மலை ஒன்றுடன் மோதியதில் 159 பேர் உயிரிழந்தனர்.
1999 – மக்காவு போர்த்துகலிடம் இருந்து சீனாவிடம் கைமாறியது.
2000 – மிருசுவில் படுகொலைகள்: யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
2004 – வட அயர்லாந்து பெல்பாஸ்ட் நகரில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து £26.5 மில்லியன் பணம் கொள்ளையிடப்பட்டது.
2007 – இரண்டாம் எலிசபெத் அதிக காலம் ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியாளராக இருந்த பெருமையைப் பெற்றார்.
இன்றைய தின பிறப்புகள்:
1876 – வால்ட்டர் சிட்னி ஆடம்சு, அமெரிக்க வானியியலாளர் (இ. 1956)
1886 – அ. வேங்கடாசலம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1953)
1901 – ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர், வான் டி கிராப் நிலை மின்னியற்றியைக் கண்டுபிடித்தவர் (இ. 1967)
1920 – கனகசபை சிவகுருநாதன், இலங்கை எழுத்தாளர், சமூக சேவையாளர் (இ. 2003)
1923 – அ. சிவானந்தன், இலங்கைத் தமிழ் ஆங்கில எழுத்தாளர், சமூக, அரசியல் செயற்பாட்டாளர் (இ. 2018)
1937 – வேலா அரசமாணிக்கம், தமிழ்ப் பேச்சாளர், இதழாசிரியர் (இ. 1991)
1940 – யாமினி கிருஷ்ணமூர்த்தி, பரதநாட்டிய, குச்சிப்புடி நடனக் கலைஞர்
1941 – பா. ரா. சுப்பிரமணியன், தமிழக எழுத்தாளர், தமிழறிஞர்
1949 – ராஜேஷ், தமிழ்த் திரைப்பட நடிகர்
1960 – எஸ். ஜி. சாந்தன், ஈழத்து மெல்லிசைப் பாடகர், நாடகக் கலைஞர் (இ. 2017)
1976 – யுகேந்திரன், தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர், நடிகர்
1987 – பார்வதி ஓமனகுட்டன், இந்திய, மலையாள நடிகை
1994 – ஹரிணி ரவி, பின்னணிப் பாடகி, பின்னணிக் குரல் வழங்குனர்
இன்றைய தின இறப்புகள்:
217 – செஃபிரீனுஸ் (திருத்தந்தை)
1921 – ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி, செருமானிய நுண்ணுயிரியலாளர் (பி. 1852)
1969 – ஆர். எஸ். சுபலட்சுமி, பெண்ணியவாதி, சமூக சீர்திருத்தவாதி (பி. 1886)
1993 – வில்லியம் எட்வர்ட்சு டெமிங், அமெரிக்க புள்ளிவிபரவியலாளர், நூலாசிரியர் (பி. 1900)
1994 – சிறில் பொன்னம்பெரும, இலங்கை அறிவியலாளர் (பி. 1923)
1996 – கார்ல் சேகன், அமெரிக்க வானியற்பியலாளர், அண்டவியலாளர் (பி. 1934)
2002 – குரோட் இரெபெர், ஆத்திரேலிய-அமெரிக்க கதிர்வீச்சு வானியலாளர் (பி. 1911)
2010 – கா. பொ. இரத்தினம், இலங்கைத் தமிழ்க் கல்வியாளர், அரசியல்வாதி (பி. 1914)
இன்றைய தின சிறப்பு நாள்:
அடிமை ஒழிப்பு நாள் (ரீயூனியன், பிரெஞ்சு கயானா)