பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க மறுத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலின் நிலை மிக மோசமாக மாறிவிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க மறுத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை 3 மடங்கு உயரும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் கடலில் இருக்கக்கூடிய கனிமவளங்களான பவளப்பாறை உள்ளிட்டவை அழியும் ஆபத்து இருப்பதாகவும், கடலில் இருக்கக்கூடிய அரிய உயிரினங்கள், மீன்கள் என அனைத்திற்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் வளத்தில் பாதிப்பை ஏற்படுத்தினால், அது பிற்காலத்தில் மிகப்பெரிய பேரழிவை மக்களுக்கு தரும். எனவே பொதுமக்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தவிர்த்து பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் இந்திய அரசும், தொழில் நிறுவனங்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து 80 சதவிகிதம் கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.