மனேந்திரகர் – சிர்மிரி – பாரத்பூர் பகுதியை இணைத்து சத்தீஸ்கரின் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஒரு நபர் 21 வருடமாக தாடியை சவரம் செய்யாமல் இருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மனேந்திரகர் பகுதியை சேர்ந்தவர் ராம சங்கர் குப்தா என்பவர் மனேந்திரகர் – சிர்மிரி – பாரத்பூர் பகுதியை இணைத்து சத்தீஸ்கரின் 32வது மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 21 ஆண்டுகளாக கோரிக்கைய வைத்து வந்தார். அந்த பகுதி மாவட்டமாக மாறும் வரை தான் தாடியைச் சவரம் செய்யப்போவது இல்லை என்றும் சபதம் எடுத்தார்.
இந்நிலையில் தற்போது சத்தீஸ்கர் அரசு அந்த பகுதியை மாநிலத்தின் 32வது மாநிலமாக அறிவித்துள்ளது. இதனைதொடர்த்து ராம சங்கர் குப்தா தாடியைச் சவரம் செய்துள்ளார். ஒரு வருடம் முன்பே இந்த பகுதியை மாவட்டமாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனால் அப்போதே 21 வருடமாக வளர்த்த தாடியைச் சவரம் செய்தார். ஆனால் மாவட்டமாக அதிகாரப்பூர்வமாக துவக்கப்படாத நிலையில் மீண்டும் ஒரு வருடமாகத் தாடியை வளர்த்து தற்போது தாடியை சவரம் செய்துள்ளார்.