நடந்து முடிந்த பிரதமர் தேர்தலில் லீஸ் டிரஸ் வெற்றி பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நடைபெற்று வந்த வாக்குப்பதிவு கடந்த 2-ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் 1.60 லட்சம் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் தபால் மற்றும் இணைய வழிகள் மூலமாக வாக்களித்து வந்தனர். பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் எதிர்பார்த்தது போல
ரிஷி சுனக்கைவிட லிஸ் டிரஸ் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதுகுறித்து லீஸ் டிரஸ் கூறியதாவது. நான் கடும் போராட்டத்திற்கு பிறகு பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து அனைவருக்கும் நன்றி. மேலும் நான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் எனவும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டத்தை செயல்படுத்துவேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் பிரதமர் பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து ராணி எலிசபெத்தை லிஸ் டிரஸ் சந்திக்க உள்ளார். மேலும் நாளை லீஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.