Categories
மாநில செய்திகள்

21 குண்டுகள் முழங்க கி.ரா உடல் நல்லடக்கம்…. ஒரு எழுத்தாளருக்கு இதுவே முதல்முறை…!!!

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் ஆகச் சிறந்த கதைசொல்லி எழுத்தாளர் கி. ராஜ  நாராயணன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று அழைக்கப்பட்ட இவர் மறைவே ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பேரிழப்பு ஆகும். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் “கரிசல் குயில்” கி.ரா இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தமிழக அரசு சார்பில் முழு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இடைசெவலில் எழுத்தாளர் கி.ரா உடலுக்கு தமிழக அரசு சார்பில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை செய்தனர். பின்னர் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழக வரலாற்றில் எழுத்தாளர் ஒருவருக்கும் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

Categories

Tech |