Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

21 தீச்சட்டி எடுத்த கோவில் நிர்வாகி… கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பூங்காவன முத்துமாரியம்மன் கோவிலில் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே அருள்சக்திபுரத்தில் பிரசித்தி பெற்ற பூங்காவன முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாசக்தி மாசாணியம்மன் சிலை 41 அடி நீளத்தில் சயன கோலத்தில் உள்ளது. கடந்த 28-ஆம் தேதி இந்த கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு 21 தீச்சட்டி, அலங்கார ரதம் ஆகியவற்றை கோவில் நிர்வாகி நாகராணி அம்மையார் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் பிறகு கோவிலை சுற்றி 108 தீச்சட்டி எடுத்து வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் கரும்பு தொட்டில் எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், காவடி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர், கோவில் பூசாரி மாரிமுத்து தலைமையில் செய்திருந்தனர்.

Categories

Tech |