கப்பல் எஞ்சின் பழுதாகியதால் கரைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இங்குள்ள சிட்னி கடற்கரையிலிருந்து சரக்கு கப்பல் ஒன்று கிளம்பியது. இதில் 21 பணியாளர்கள் இருக்கின்றனர். இந்த கப்பலின் எஞ்சின் திடீரென பழுதாகி கடலில் நிற்கிறது. இந்நிலையில் பலத்த காற்று வீசுவதால் கப்பல் மீண்டும் கரைக்கு அடித்துச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கப்பலை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.