Categories
உலக செய்திகள்

21 பயங்கரவாதிகளுக்கு…. தூக்குத்தண்டனை நிறைவேற்றம்…. ஈராக் அரசின் அதிரடி முடிவு…!!

தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட 21 பயங்கரவாதிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஈராக் நாட்டில் கடந்த 2014ஆம் வருடம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. இந்த அமைப்பு சிரியாவில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தபோது அமெரிக்கா மற்றும் ரஷியா உட்பட பலநாடுகளின் அதிரடி தாக்குதல்களில் இந்த பயங்கரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பயங்கரவாத அமைப்பில் உள்ள பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்கள் மீதும், அரசு படையினர் மீதும் தாக்குதல்களை நடத்தியதால் பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு ஈராக்கில் உள்ள சிரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த பயங்கரவாதிகளின் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவரவரின் குற்றத்திற்கு ஏற்ப வாழ்நாள் சிறைத் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நஸ்ரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள் 21 பேருக்கு ஈராக் அரசு தூக்குத் தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இந்த தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட 21 பயங்கரவாதிகளும் கொலை குற்றங்கள் மற்றும் டல் அப்ரா நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று ஈராக் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |