தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவ நிபுணர் குழு சொல்லுவது எல்லாம் அதிக அளவு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் கொரோனா ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும் என்பதை உள்வாங்கிய தமிழக அரசு நாட்டிலே அதிக பரிசோதனை செய்து வருகின்றது.
இந்த நிலையில் மேலும் அதிக அளவு பரிசோதனை செய்வதற்கு புதிய முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் புதிய முறையில் பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக குழுவாக 10 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்து அதில் பாசிட்டிவ் என வந்தால் அந்த குழுவில் உள்ளவர்களுக்கு மட்டும் தனித்தனியே பரிசோதனை செய்யும் குழு பரிசோதனை மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது.