Categories
மாநில செய்திகள்

21 மீனவர்களின் குடும்பத்திற்கு…. ரூ.20 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் அறிவித்து வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி கொரோனா பெருந்துயர் காலத்தில் மக்களின் நலனை கருத்தில் கொரோனா நிவாரண தொகையாக ரூபாய் 4,000 அறிவித்தார்.

மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதிஉதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்நிலையில் டவ்தே புயலில் சிக்கி 21 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.  அந்த 21 மீனவர்களின் குடும்பத்திற்கும் ரூபாய் 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

Categories

Tech |