மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டமானது கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வீதம் மூன்று மாதங்களுக்கு பயன் படுத்துகின்ற வகையில் கட்டணமில்லா பயனர் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.
இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்து. இந்த நிலையில், சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜூன் 21-ம் தேதி முதல் வழங்கபடும் எனவும், இதற்காக 40 பணிமனை- பேருந்து நிலையங்களில் ஜூலை 31 வரை டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.