கேரளாவில் திருமணம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிக அளவில் இருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் கடந்த 2020 ஆம் வருடம் 84 லட்சம் பேரிடம் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. அந்த கணக்கெடுப்பில் பெண்களின் திருமண வயது, கருத்தரிப்பு, இறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நாடு முழுவதும் உள்ள 18 வயதிற்கு முன்பே திருமணம் ஆகும் பெண்களின் சதவிகிதம் 1.9 ஆக இருக்கிறது. அதில் மிகக் குறைந்த அளவாகவே ஜார்கண்ட் மாநிலத்தின் இதன் அளவு 5.8 சதவீதமாக இருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலத்தின் குழந்தை திருமணங்கள் அதிக அளவு ஊரகப்பகுதிகளில் 7.3 சதவீதமாகவும் நகரங்களில் 3 சதவிகிதமாகவும் இருக்கிறது. இந்த நிலையில் கேரளாவில் எந்த பெண்ணிற்கும் 18 வயதிற்கு முன்பாக திருமணம் நடைபெறவில்லை என கணக்கெடுப்பில் கூறப்பட்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் திருமணம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருக்கிறது 21 வயதுக்கு முன்பு திருமணமாகும் பெண்களின் தேசிய சதவீதம் 29.5 சதவீதமாக இருக்கிறது. இந்த அளவிற்கு மேற்குவங்க மாநிலத்தில் 54.9% 54.6 சதவீதமாகவும் இருக்கிறது அதேபோல குற்ற சம்பவங்களும் ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக அளவில் நடைபெறுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கு பில்லி சூனியம் மூலமாக கடந்து 2020 ஆம் வருடம் 15 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து காதலிக்க மறுத்து சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. இங்கு 14 வயது பழங்குடியின சிறுமி ஒருவர் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த 2 சம்பவங்கள் பற்றி தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் இளம்பெண் ஒருவர் மீது சமீபத்தில் ஆசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.