Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர்களுக்கு… “எச்சரிக்கையாக இருங்கள்”… உங்கள் ராசி பற்றி அறிய..!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் : 

எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மேஷராசி அன்பர்களே…!! இன்று நேர்மையான குணம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். திறமை வளர்ந்து பல மடங்கு நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கை அடையக் கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். நண்பர்களுடன் விருந்து விழாவில் இன்று கலந்து கொள்வீர்கள். இன்று மனம் வருந்தும் படியான சூழல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். அதிலும் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். எல்லோரையும் அனுசரித்துச் செல்வதால் நன்மை கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்கும்.

மனதில் மட்டும் வீண் மனக்கவலை வந்து செல்லும். பொறுமையாக இருங்கள். கவனமாகவும் இருங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டியதாக இருக்கும். ஆசிரியரின் சொல்படி நடந்து கொண்டால் அனைத்தும் சரியாகும். சக மாணவரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போதோ முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் போதோ சிவப்பு நிற ஆடையோ அல்லது சிவப்பு நிறத்தில் கைகுட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும். அதுபோலவே அதிகாலையில் நீங்கள் எழுந்ததும் விநாயகரை வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

ரிஷபம் : 

மன தைரியம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சில் ரசனை மிகுந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி புதிய அனுபவத்தை கொடுக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். குடும்ப பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். இன்று மன தைரியம் அதிகரிக்கும். ஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடும். அந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். பணம் பல வழிகளில் செலவாகும் பார்த்துக்கொள்ளுங்கள். காரிய தாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்தவித உத்திரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் மனக்கவலை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள்.

நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்பட்டு தான் கைக்கு வந்து சேரும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடும். இருந்தாலும் கொஞ்சம் பொறுமையாக செயல்படுங்கள். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடையோ அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையோ  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்

மிதுனம் : 

மற்றவர்களின் மனதை தெளிவாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே..!! இன்று சொந்த நலனில் அக்கறை கொள்வீர்கள். அவப்பெயர் வராமல் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். அளவான  பண வரவு இன்றைக்கு கிடைக்கும். ஒவ்வாத வாசனைப் பொருட்களை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம். இன்று சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது  வெற்றிக்கு வழி வகுக்கும். உங்களுடைய அறிவுத்திறன் இன்று அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவது போலிருக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வருவாய் உண்டாகும்.

சோதனைகள் அனைத்தும் வெற்றியாகவே மாறும். இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். இன்று மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடைய கூடும் இருந்தாலும் படித்த பாடத்தை மட்டும் ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது சிறப்பை கொடுக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு வணங்குவது இன்றைய நாளுக்கான சிறப்பை கொடுக்கும். காரியத்தில் வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

கடகம் : 

அனைவரிடமும் கண்ணியமாக நடந்துக்கொள்ளும் கடகராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்திறன் கண்டு சிலர் பொறாமை கொள்ளக் கூடும். பொறுமை காப்பதால் சிரமத்தை தவிர்க்கலாம். தொழில் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதலாகப் பணிபுரிவது அவசியமாகும். பணச்செலவு இன்று அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது மிதவேகத்தை பின்பற்றுங்கள். இன்று வீண் அலைச்சல் இருக்கும். மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் ஏற்படும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பண வரவுகள் தாராளமாகவே இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். உங்களுடைய வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெற்றுக்கொடுக்கும்.

உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும். அனைவரையும் கவரும் விதமாக இன்று நீங்கள் பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். மகிழ்ச்சியும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு மட்டும் கொஞ்சம் பொறுமையாகவும் கல்வியில் கவனமாகவும் இருக்க வேண்டும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்தில் ஈடுபடும் போது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ  எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அது போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் உங்களுக்கு அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

சிம்மம் : 

தெளிவான சிந்தனை ஆற்றல் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கு புதிய வாய்ப்புக்கள் உருவாகும். சாமர்த்தியமாகவும் இன்று நீங்கள் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்கள் வளர்ச்சிக்காக சிலர் திட்டங்களை செயல்படுத்த முடிவு எடுப்பீர்கள். பணவரவு தாராளமாகவே இருக்கும். உங்களுடைய செயல் திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடும். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சியும்  ஏற்படும்.

இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை  கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். மதிப்பு மரியாதை சிறப்படையும். உங்களுடைய செல்வாக்கும் ஓங்கி நிற்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். இருந்தாலும் படத்தை ஒரு முறைக்கு இருமுறை எழுதிப் பார்ப்பது மிகவும் சிறப்பு. அதுபோலவே நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்வதாக இருந்தாலும், முக்கியமான காரியத்தை எதிர்கொள்வதாக இருந்தாலும் ஆரஞ்சு நிற ஆடையோ அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு இன்றைய  நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

கன்னி : 

கொடுத்த வேலையை சிறப்பாக நேர்மையாகவும் செய்யக்கூடிய கன்னிராசி அன்பர்களே..!! உங்களுக்கு சிலர் இன்று உதவுவது போல் பாசாங்கு செய்யக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு சில மாற்றங்களைச் செய்வீர்கள். பணவரவு இன்றைக்கு தாமதமாக கிடைக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றுங்கள். இன்று குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும் கவனம் இருக்கட்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகக் கூடும் எச்சரிக்கையாக இருங்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கவனமாக இருப்பது நல்லது.

செலவு கொஞ்சம் அதிகரிக்கும். வீண்  கவலை கொஞ்சம் உண்டாகும். இன்று வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். குடும்பத்தில் இன்று கலகலப்பும் இருக்கும். ஒற்றுமையும் இருக்கும். மனம் மகிழ்ச்சியாகவே இன்று நீங்கள் காணப்படுவீர்கள். இன்று வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விஷயமும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்டமான எண் :  1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

துலாம் : 

காரியத்தை கண்ணும் கருத்துமாக செய்யக்கூடிய துலாம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சில் உறுதி நிறைந்திருக்கும். உயர்ந்த செயல்களால் நல்ல மதிப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் குறுக்கிட்ட இடையூறு விலகி செல்லும். உபரி பண வருமானம் கிடைக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது மட்டும் நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதற்கு கொஞ்சம் தாமதம் பிடிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலும் வேலைப்பளுவும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி புத்தி தெளிவு ஏற்படும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது நீல நிற ஆடையோ அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையோ  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : கிழக்கு

அதிஷ்ட எண் :  1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

விருச்சிகம் : 

செய்யும் வேலையை மிகவும் நேர்த்தியாகவும் துல்லியமாகவும் செய்யக்கூடிய விருச்சிகராசி அன்பர்களே..!! இன்று மனதில் நம்பிக்கையை வளர்ப்பது அவசியம்.தொழில் வியாபாரத்தில் உள்ள குறைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதிக நிபந்தனையுடன் பணம் கடன் பெறக்கூடாது. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுங்கள். இன்று நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இன்று காலகட்டத்தில் எதிர்ப்புகள் உங்களுக்கு விலகி செல்லும். எல்லா வகையிலுமே நன்மையும் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும்  ஏற்படும். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து இன்றைக்கு மனம் வருந்த நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள்.

மனதை கூடுமான வரை நிம்மதியாக வைத்துக்கொள்ளுங்கள். ஆலயம் சென்று வாருங்கள். மனம் சிறப்பாகக் காணப்படும். இன்றைய நாள்  முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது அல்லது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியமும்  சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் நீங்கள் விநாயகரை வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அணைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

தனுசு : 

தனது கண் பார்வையால் அனைவரையும் கவரக்கூடிய தனுசு ராசி அன்பர்களே..!! பலநாள் தாமதமான பணி ஒன்று இன்று எளிதாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனையில் அனுகூலம் ஒரு சேர கிடைக்கும். பணப் பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும். மாமன், மைத்துனருக்கு உதவிகள்  செய்வீர்கள். இன்று நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் காரியத்தடை தாமதம் ஏற்படக்கூடும். உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படும். ஆகையால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். வீண்பயம் அவ்வப்போது வந்து செல்லும். ஏற்கனவே நீங்கள் செய்த காரியங்களுக்கான பலனை இன்று நீங்கள் அடையக்கூடும். சிலர் வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். அதிலும் கவனம் இருக்கட்டும். வீண் வழக்கு விவகாரங்கள் வரக்கூடும்.

ஆகையால் எச்சரிக்கையாக செயல்படுங்கள். உரிமையை மட்டும் விட்டுவிடாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கூடுதலாக தான் உழைக்க வேண்டி இருக்கும். அதுபோலவே முக்கியமான பணியாக இருந்தாலும், முக்கியமான காரியமாக இருந்தாலும் வெள்ளை நிறத்தில் ஆடையை  அணிந்து செல்லுங்கள். இல்லையெனில் வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை  எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

மகரம் :

கஷ்டங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மனதில் வைத்துப் பூட்டிக் கொள்ளும் மகர ராசி அன்பர்களே..!! இன்று பல நாள் தாமதமான பணி ஒன்று நிறை வேறும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். வெற்றி பெற எளிதான வழி பிறக்கும். தொழில் வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழிக்கும். நிலுவை பணமும் வந்து சேரும். விலகிய உறவினர்கள் சொந்தம் பாராட்டக் கூடும். இன்று வெளிநாட்டு பயண வாய்ப்புகள் ஏற்படும். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தினருடன் பழகும் போது மட்டும் கவனமாக பழகுங்கள். தொழில் வியாபாரம் சுமாராகவே நடக்கும். நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.கடன் தொல்லை தலை தூக்கலாம்.

எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக் கூடும். அதிலும் கவனம் இருக்கட்டும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும்  நல்லபடியாகவே நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

கும்பம் : 

கடுமையான செயல்களையும் எளிதாக செய்யக்கூடிய கும்பராசி அன்பர்களே..!! சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனை சொல்லக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்கால நலன் கருதி விலகி இருப்பது நல்லது. தொழிலில் குறையை சரி செய்வதால் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை கொடுக்கும். இன்று தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே மன வருத்தம் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள்.

பயணங்கள் செல்ல நேரிடும். அதன் மூலம் உங்களுக்கு அலைச்சல் இருக்கும். கடன் விஷயங்களில் கவனமாக இருங்கள். நீங்கள் யாரிடமும் எந்த விதமான கடன் வாங்காதீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

மீனம் : 

தெய்வ அருளை பரிபூரணமாக கிரகித்துக்கொள்ளும் மீனராசி அன்பர்களே..!! உங்களுக்கு உங்கள் செயல்களில் நிதானம் வேண்டும். இன்று சக தொழில் சார்ந்த எவரிடமும் சச்சரவு பேசக்கூடாது. அதேபோல தொழிலில் உள்ள ரகசியத்தையும் பாதுகாக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் விலைக்கு வாங்க வேண்டாம். இன்று எதையும் சாதிக்கும் திறமை அதிகமாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த படி செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை  கொடுப்பதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் ஏற்படும். சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதமாக நடக்கும்.

இன்று சொத்து விஷயங்களில் உள்ள முடிவுகள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். கலைத்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். பொறுமையை கையாண்டால் இன்று சிறப்பை அடைய முடியும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடையமுடியும். குடும்பத்திலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பை கொடுப்பதாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு வாருங்கள். இன்றைய நாள்  உங்களுக்கு சிறப்பை கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |