தினமும் திராட்சை சாறு உடன் சக்கரை சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கிறது என்பதை குறித்து இதில் பார்ப்போம்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாதவிளக்கு தள்ளிப்போதல் குறைவாகவும் அதிகமாகவும் போகும் சமயங்களில் கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும். இதை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகிவிடும்.
எல்லா திராச்சைகளிலும் விட்டமின் ஏ உயிர் சத்து உள்ளது. சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்தமான நிலையில் இருப்பவர்கள் பன்னீர் திராட்சையை அரை டம்ளர் குடித்து வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு முகம் சுருக்கம் ஏற்படும் போது திராட்சை பழத்தை நன்கு அரைத்து கூல் போல மாற்றி இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி வர முகம் புத்துணர்ச்சியாகும். சுருக்கம் ஏற்படாது.