Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கர்ப்பிணி பெண் உட்பட புதிதாக 21 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் மேலும் 21 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணும் அடங்குவார். இதையடுத்து கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,000 நெருங்கியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 144 தடை அமல்படுத்தப்பட்டு இன்று 9வது நாளாக அமலில் உள்ளது. இதையடுத்து இன்றும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகரித்து தான் வருகிறது.

அதன்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதில் 74 பேர் டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை 309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |