புகையிலை பாக்கெட்டுகள், மது பாட்டில் விற்பனை செய்த 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 2 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் ஒரு வழக்கும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 3 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் ஆக மொத்தம் 21 வழக்குகள் பதிவு செய்யபட்டு 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்த 103 புகையிலை பாக்கெட்டுகள், 58 மதுபாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.