Categories
தேசிய செய்திகள்

இந்திய கடற்படையை சேர்ந்த 21 மாலுமிகளுக்கு கொரோனா!

இந்திய கடற்படையை சேர்ந்த 21 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அசுர வேகத்தில் பரவிவருகின்றது.. அதிகபட்சமாக மகாராஷ்டிரா தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் மும்பையில் இருக்கும்  இந்திய கடற்படையில் 21 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்குள்ள ஒரு கடற்படை மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மாலுமிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது கடற்படையில் பதிவாகும் கொரோனா பாதிப்பின் முதல் தொகுப்பாகும். தற்போது மாலுமிகளுடன் தொடர்பில் இருந்த நபர்களைக் கண்டுபிடிக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

முன்னதாக மாலுமிகள் அனைவரும் மேற்கு கடற்படை குடியிருப்பு விடுதிகளில் தங்கியிருந்தனர். நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்ததால் இவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வந்து உள்ளனர். அப்போது கொரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டு அனைவருக்கும் பரவியதாக கூறப்படுகிறது.

மும்பையில் இருக்கும் கடற்படை கப்பல்துறை, அதன் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட மேற்கு கடற்படை பெரும்பகுதியைக் கொண்டுள்ளது, ஐ.என்.எஸ் ஆங்க்ரேவில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் இது இருக்கிறது..

Categories

Tech |