21 வயது இளைஞர் ஒருவர் விஷப்பாம்புகளை பிடித்து கடிக்க வைக்கும் வீடியோ பார்க்கும் பலரை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசிப்பவர் பாம்பு நிபுணரான david orivin humplett(21). இவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாம்பு தன்னை கடிக்கும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் டேவிட் விலங்குகள் ஆபத்தானவை அல்ல என்பதை விளக்கிக் காட்டியுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தண்ணீருக்குள் இருக்கும் மலைப்பாம்பை பிடித்து அதை உடல் முழுவதும் சுற்றி வைத்து கொண்டு கடிக்க வைக்கிறார். மேலும் இவர் 1-10 பாம்புகளை கடிக்க வைத்து மதிப்பிட்டுள்ளார்.
அங்குள்ள ஒரு பகுதியிலிருந்து பிடித்த பாம்பு ஒன்றை கையில் வைத்திருக்கும் போது அவரை பாம்பு உதட்டில் கடித்து விடுகிறது. இதனால் உதட்டிலிருந்து ரத்தம் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இது குறித்து டேவிட் கூறுகையில், “நான் விலங்குகளை கவனித்துக் கொள்ள விரும்புகிறேன். பாம்புகள் என்னை கடிக்கும்போது நான் அதை மிகவும் நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இவர் தன்னை புகழ்பெற்ற விலங்கியல் நிபுணர் stev irwin உடன் ஒப்பிட்டு கொள்கிறார். இவர் பாம்புகளை பற்றி படித்ததால் அதை தான் காண விரும்புவதாக கூறியுள்ளார். 15 வருடங்களாக விஷப் பாம்புகளை பிடித்து வருவதாகவும், நாளுக்கு நாள் தன்னுடைய திறமையை வளர்த்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது பாதுகாப்பானதாக இருந்தலும் கூட, இது ஒரு விபரீத விளையாட்டு என்று கூறி வருகின்றனர்.