Categories
உலக செய்திகள்

ஆங் சாங் சூகியின் நெருங்கிய நண்பருக்கு… 21 வருடங்கள் ஆயுள் தண்டனை…. ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு…!!!

மியான்மர் நாட்டின் ஆங் சாங் சூகியினுடைய நெருங்கிய நண்பருக்கு 21 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

மியான்மரில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று ராணுவம் ஆட்சியை கைப்பற்றி விட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் முக்கிய தலைவர்களை சிறை பிடித்தது. ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டது, ஊழல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஆங் சாங் சூகிக்கு பத்து வருடங்களுக்கு மேல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவரின் நெருங்கிய நண்பரான, ஷா மியூட் மவுங்க்கு 21 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர் மீது இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக இராணுவ நீதிமன்றம் கூறியிருக்கிறது.

Categories

Tech |