கொலம்பியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு கடத்த முயற்சி செய்த அரியவகை சிலந்திகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் தேள்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
கொலம்பியாவில் இருந்து 210 பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு இருந்த 232 டிராண்டுலா வகை சிலந்திகள், சிலந்தி முட்டைகள், தேள்கள் மற்றும் 67 கரப்பான் பூச்சிகளை 2 பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்த முயற்சி செய்தனர். இவ்வாறு கடத்த முயற்சி செய்த 2 ஜெர்மானியர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த அரியவகை ஊர்வன ஜீவராசிகளை பறிமுதல் செய்தனர். இதேபோன்று 10 ஆயிரத்துக்கும் அதிகமான பன்முகத்தன்மை கொண்ட உயிரினங்களை உடைய கொலம்பியாவில் ஜீவராசிகள் கடத்தல் பெரும் தொழிலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.