Categories
உலக செய்திகள்

210 யூடுயூப் சேனல்கள் முடக்கம்…. காரணம் என்ன..?

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக செயல்பட்டு வந்த  210 யூடுயூப் சேனல்களை கூகுள் முடக்கியுள்ளது.

சமூகவலைதளங்கள் மூலமாக மற்ற நாட்டில் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது  சீனாவும் அதேபோல  பின்பற்றுவதாக வலைதள ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

Image result for YouTube disables 210 channels

ஹாங்காங்கில் அதிக சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தி வருபவர்களை ஐ எஸ் ஐ எஸ் (ISIS) தீவிரவாதிகளோடு ஒப்பீடு செய்தும், சமூகத்தின் கரப்பான்பூச்சிகள் போல் சித்தரித்தும், யாரோ பின்புலமாக  இருந்து ஒருங்கிணைத்தது போல் செயல்பட்ட 1000 கணக்குகளை பேஸ்புக்கும், 2,00,000 கணக்குகளை ட்விட்டரும் முடக்கி விட்டது. இதில் பாட்ஸ்கள் என்ற  தானியங்கி கணக்குகளும்  அடங்கும்.

Image result for 210 Youtube channels freeze

இந்நிலையில் அதே புகாரின் பேரில் தற்போது ஹாங்காங்கில் நடைபெற்று வரும்  போராட்டத்துக்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட்டது போல் செயல்பட்டு கருத்து கூறி வந்த 210 யூடுயூப் சேனல்களை கூகுள் நிறுவனம் முற்றிலுமாக முடக்கியுள்ளது.

Categories

Tech |