தமிழகத்தில் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை கவனிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தொடர்ந்து பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும் சுகாதார ஊழியர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2,100 சுகாதார பணியாளர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்காலிக சுகாதார பணியாளர்களை நியமிக்கவும், ஊதியம் வழங்கவும் ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்த போலீசார் 36 பேரின் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 36 போலீசாரின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் வழங்க 9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.