Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசு பள்ளியில படிச்சாங்க… 211மார்க் தான் எடுத்தாங்க…. இதான் சரித்திர சாதனை ….!!

அரசு பள்ளி மாணவர்கள் 7.5% உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிப்பது சரித்திர சாதனை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் வனவாசி யில் 86 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பேசினார். அப்போது ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க அதிகமான கல்லூரிகளைத் திறந்துள்ளோம். அதன் விளைவாக இன்றைய தினம் நாட்டிலேயே உயர்கல்வி படிப்பிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கின்றது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மட்டுமல்ல…. பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ITI கல்லூரி என பல கல்லூரிகள் தமிழகத்தில் திறந்ததன் விளைவாக கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

சரித்திர சாதனை:

மருத்துவ கல்லூரியை பற்றி சொன்னால் தமிழக வரலாற்றிலேயே… ஏன் இந்திய வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்த சரித்திரம் கிடையாது. இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு சரித்திர சாதனையை படைத்திருக்கிறது. ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளோடு மருத்துவமனையையும் சேர்த்து கொண்டு வந்திருக்கின்றோம்.

கூடுலாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பு :

ஒரே நேரத்தில் 20121- 2022ஆம் ஆண்டு 1,650 மாணவர்கள் ஒரே நேரத்தில் படிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே 2011 வரைக்கும் அம்மா அவர்கள் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுகின்ற வரை மருத்துவருடைய இடம் தமிழகத்தில் 1945. இன்றைக்கு மாண்புமிகு அம்மா அவர்கள் எடுத்த நடவடிக்கை… மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கையினால் சுமார் 3060 பேர் கூடுதலாக மருத்து கல்லூரி படிக்கும் சூழ்நிலை உருவாகிக் தந்து இருக்கின்றின்றோம்.

எண்ணிப்பாருங்கள் மக்களே:

எண்ணிப்பாருங்க 2011ல் 1945, மாண்புமிகு அம்மா அவர்கள் இருக்கும் போது புதிதாக துவங்கப்பட்டது. மத்திய அரசிடம் அனுமதி பெற்று கூடுதலாக மருத்துவ இடங்கள் அதிகபடுத்தியது. இப்பொழுது 2021 -22ல் புதிதாக ஆரம்பிக்கப்படுகின்ற மருத்துவ கல்லூரியை சேர்த்து 3060 என்று சொன்னாள் எந்த அளவுக்கு மருத்துவக் கல்லூரிகளில் நம்முடைய மாணவர்கள் படிப்பதற்கு எங்களுடைய அரசு எடுத்துக்கொண்ட முயற்சி என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கேட்க வேண்டிய இடத்துல கேளுங்க:

சில அரசியல் கட்சி தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீட்தேர்வு, நீட்தேர்வு என்று எப்போது பார்த்தாலும் குரல் கொடுக்கிறார்கள். பத்திரிகை நண்பர்கள் சரி, ஊடக நண்பர்களும் அதே கேள்விதான் கேட்கிறார்கள்.ஆனால் கேட்க வேண்டிய இடத்துல, கேட்க மாட்டேங்கிறாங்க. அதுதான் எனக்கு ஒரு வருத்தம். கேட்க வேண்டிய இடத்தில் கேட்டால் தான் சரியான பதில் கிடைக்கும். நீட் தேர்வு கொண்டு வந்தது யாரு ? மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகம் அந்த ஆட்சியில் அங்கம் வகித்தது. அந்த காலகட்டத்தில்தான் நீட்தேர்வு கொண்டு வந்தாங்க.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது:

ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற மாறி பேசுறாங்க. இவர்கள் கொண்டுவந்ததை நாங்கள் தடுத்து நிறுத்தி கொண்டிருந்தோம், சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தோம். இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே நாம் அமல்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தவிர்க்க முடியாத நிலையில் நீட் தேர்வை நடத்த வேண்டிய சூழல் இருக்கின்றது. ஆகவே இந்த காலகட்டத்திலும் நாம் எண்ணிப் பார்த்தோம்.

நானே சிந்தித்தேன்:

எந்த எதிர்க்கட்சித் தலைவரும் கோரிக்கை வைக்கவில்லை. எந்த எதிர்கட்சிக்காரர்களும் கோரிக்கை வைக்கல, பொதுமக்களும் கோரிக்கை வைக்கல… இதற்க்கு எப்படி தீர்வு காண வேண்டும் என நான் சிந்தித்தேன். இன்றைக்கு ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதிக மதிப்பெண் பெற முடியாத காரணத்தினால் அவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்காத ஒரு சூழல் ஏற்படுகிறது.

7.5 உள் ஒதுக்கீடு:

அப்படிப்பட்ட மாணவர்களுக்கு எந்த அளவிலே நன்மை செய்ய முடியும் என்று எண்ணிப் பார்த்து என்னுடைய எண்ணத்திலே உதிக்கப்பட்டது உள்ஒதுக்கீடு. 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை கொண்டுவந்தோம். அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் பெரும்பாலும் ஏழை மாணவர்கள் தான் அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள். இன்றைக்கு அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு 7.5% இன்றைக்கு மாண்புமிகு அம்மாவின் அரசு ஆணையிட்டு உத்தரவு வழங்கி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

நீட் தேர்வில் 211மார்க்:

7.5% உள் ஒதுக்கீடு என்று சொல்லும் போது சேலம் மாவட்டத்தில் மட்டும் 21 பேர் இன்று மருத்துவ கல்லூரிக்கு செல்கிறார்கள். அதில் 21 ஆவது பேர் நீட் தேர்வில் 211 மார்க் வாங்கி வாங்கி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருக்கின்றார்கள் என்று சொன்னால் இந்த அரசு ஏழை எளிய மாணவர்கள் மீது எந்தளவு அக்கறை கொண்டுள்ளது என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Categories

Tech |