Categories
மாநில செய்திகள்

“2,213 புதிய பேருந்துகள்”….. இந்த வகையில் இருக்கணும்….. தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அனுமதி…..!!!!

2,213 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பெறும் வகையில் அவர்கள் பேருந்துகளில் எளிய முறையில் ஏறும் வகையில் பிரத்தியேகமாக பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

அதன்படி 2, 213 புதிய பேருந்துகள், 500 மின்கல பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் அதில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |