செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண்பதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.8,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருச்சி கேம்பியன் மேல்நிலைப் பள்ளியில் உலக சாதனை நிகழ்த்தும் விதமாக 2,140 மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாபெரும் சதுரங்க விளையாட்டு பாடம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை அடுத்து, அமைச்சர் கே.என்.நேருவிடம் உலக சாதனை நிகழ்விற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.