ஐதராபாத்தில் உள்ள முச்சிந்தலாவில் வைணவ ஆச்சாரியரான இராமானுஜரின் ஐம்பொன்னால் ஆன 216 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அங்கு ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து விளக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் லேசர் விளக்குகளால் ராமானுஜர் சிலையை சுற்றி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த ராமானுஜர் சிலை “சமத்துவ சிலை” என்று அழைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க பக்தர்களின் நன்கொடை மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.1,000 கோடி செலவில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிலை என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.