Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

21 குண்டுகள் முழங்க… போலீஸ்காரரின் உடல் தகனம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள நகரம் பகுதியில் சந்தன பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மாரிச்சாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிவகிரி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிச்சாமி நெல்லை பகுதிக்கு தனது பணிக்காக மோட்டார் சைக்கிளில் மேலநீலித நல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த போலீஸ்காரரான மாரிச்சாமியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு மாரிச்சாமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான கருப்புசாமியிடம் நடத்திய விசாரணையில் அவர் தென்காசியில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகின்றார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இறந்த மாரிச்சாமியின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான நகரத்தில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர் உசேன் மற்றும் பல காவல்துறையினர்கள் கலந்து கொண்டு இறந்த போலீஸ்காரரான மாரிச்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனையடுத்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மாரிச்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Categories

Tech |