நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளத்தில் 43 வயது பெண்ணிற்கு திருமணமாகி கணவரும், ஒரு மகளும், மகனும் உள்ளனர் . மகள் கல்லூரியில் படித்து வருகிறார். மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் 43 வயதாகும் அந்தப் பெண்ணிற்கு அதே பகுதியில் வசிக்கும் 21 வயதான கல்லூரி மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசி வந்துள்ளனர் . அதன் பிறகு அவர்களின் பழக்கம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது . அதனால் இருவரின் வீட்டிலும் அவர்களை கடுமையாக கண்டித்துள்ளனர்.
அதனால் அவர்கள் சந்திக்க இயலாமல் போனது. அதனால் மனமுடைந்த இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறினர். உறவினர்கள் எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை . இதனையடுத்து இரு வீட்டாரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் . அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு இருவரும் திருச்சியில் இருப்பது காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இருவருமே வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் நேராக திருச்சிக்கு சென்றுள்ளனர்.
அதன்பிறகு அங்கு வாடகை வீடு எடுத்து கணவன் மனைவி போன்று வாழ்ந்து வந்துள்ளனர் . இதையடுத்து மாணவர் தினமும் வேலைக்கு சென்று சம்பளம் வாங்கிக்கொண்டு வருவார். அதனைவைத்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆறுமாத வாழ்க்கைக்குப் பிறகு இருவருக்கிடையே கசப்பு ஏற்பட்டது. அதனால் மாணவர் நான் திருச்சியில் இருக்கிறேன் என்னை அழைத்து செல்லுங்கள் என்று உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இந்த தகவலை உடனே உறவினர்கள் காவல்துறயினரிடம் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு காவல் துறையினர் திருச்சிக்கு சென்று இருவரையும் மீட்டனர். இருவரும் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள். காவல் நிலையத்தில் வைத்து மாணவன் நான் பெற்றோருடன் செல்வதாக கூறிஉள்ளான். அதனால் அவரை பெற்றோருடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். ஆனால் அந்தப் பெண்ணை அழைத்து செல்ல யாரும் வராத காரணத்தால் அந்தப் பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து தகாத உறவிற்காக தங்களுடைய குடும்பத்தை உதறிவிட்டு சென்ற பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.