தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,329 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் | சென்னையில் 93,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,758-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 1,51,055ஆக உள்ளது.தமிழக்தில் இதுவரை பதிவாகாத அளவாக இன்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனா பலி 3,409ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முழுவதும் 52,273பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சென்னையில் மட்டும் 13,923பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.
கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 73.07 % குணமடைந்துள்ளனர். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 62பேர் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் இன்று கொரோனா உறுதி கண்டறியப்பட்டுள்ளதில், 22 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா உயிரிழப்பு :
சென்னை -20
மதுரை – 9
விருதுநகர் – 9
திருவள்ளூர் -6
திருச்சி – 6
கோவை – 6
செங்கல்பட்டு -4
தி.மலை – 4
தேனி – 3
திண்டுக்கல் -3
க.குறிச்சி – 3
புதுக்கோட்டை – 2
ராமநாதபுரம் – 2
குமரி – 2
நெல்லை – 2
காஞ்சிபுரம் – 2
தென்காசி – 1
விழுப்புரம் – 1
சேலம் – 1
தூத்துக்குடி – 1
திருப்பத்தூர் -1
சிவகங்கை – 1