Categories
தேசிய செய்திகள்

22ம் தேதி முதல் மாஸ்டர் டெபிட், கிரெடிட் கார்டுக்கு…. ரிசர்வ் வங்கி அதிரடி தடை…!!!

மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் தடைவிதித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் விவரங்களை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் தரவுகளை சேமிப்பதில் விதிகளை மீறிய காரணத்தினாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் கார்டு நிறுவனங்களுக்கு அதிக நேரம் மற்றும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட போதிலும் இந்த நிறுவனங்கள் அதனை சரி செய்யவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவுக்கு பிறகு வங்கிகளால் ஜூலை 22 க்கு பிறகு புதிய மாஸ்டர் கார்டுகளை வழங்க முடியாது. இருப்பினும் ஏற்கனவே மாஸ்டர் கார்டு நிறுவனங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் காடுகளை பயன்படுத்துபவருக்கு எந்த தடையும், பாதிப்பும் ஏற்படாது என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |