Categories
சினிமா தமிழ் சினிமா

22 ஆண்டுகளுக்கு பின் பிரசாந்த் – லைலா…. வைரலாகும் வீடியோ…!!!!!

நீண்ட வருடங்களுக்குப் பின் நடிகை லைலா பிரசாந்தை சந்தித்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை லைலா  90களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர். அவர் கடைசியாக அஜித் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான திருப்பதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து திருமணமானவுடன் அவர் சினிமா பக்கமே வரவில்லை. இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் லைலா  சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார்.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் நடித்து வரும் சர்தார் படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது நடிகை லைலாவும், பிரசாந்தும்  பல ஆண்டுகளுக்குப்பின் சந்தித்துள்ளனர். லைலா தனது இன்ஸ்டாகிராமில் பிரசாந்துடன் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் இருவரும் ரொமான்ஸ் செய்த ஒரு பாடலுக்கு இருக்கும் வீடியோவை பதிவிட்டிருக்கிறார். உங்கள் சக நடிகரை நீங்கள் சந்திக்கும் பொழுது என்று குறிப்பிட்டிருக்கிறார். 2000 ஆண்டு வெளியான பார்த்தேன் ரசித்தேன் படத்தில்இணைந்து நடித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து சுமார் 22 ஆண்டுகளுக்கு பின் தற்போது ஒருவரை ஒருவர் சந்தித்திருக்கின்றனர். பிரசாந்த் தற்போது அந்தகன்  படத்தில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த படத்தின் மூலம் பிரஷாந்த் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். மேலும் இதில் சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி மற்றும் கார்த்திக் போன்றோர் நடித்திருக்கின்றனர்.

Categories

Tech |