Categories
சினிமா தமிழ் சினிமா

22 ஆண்டு கால கனவு… தந்தையின் ஆசையை நிறைவேற்றிய இளம் நடிகை..!!

நடிகை சாக்ஷி அகர்வால், அவருடைய தந்தையின் 22 ஆண்டு கனவான சொகுசு கார் வாங்குவதை நிறைவேற்றியுள்ளார்.

சாக்ஷி அகர்வால் தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் முன்னணி நடிகர்கள் நடித்த “காலா”, “விஸ்வாசம்” போன்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அண்மையில் இவர் நடிப்பில் அரண்மனை 3 , சிண்ட்ரெல்லா போன்ற படங்கள் வெளியாகியிருந்தன. தற்பொழுது “நான் கடவுள் இல்லை”, “தி நைட்” போன்ற படங்கள் வெளியாக உள்ளது.

இந்தசமயத்தில், நடிகை சாக்ஷி அகர்வால் சொகுசு கார் ஒன்றினை புதிதாக வாங்கி உள்ளார். இதுப்பற்றி சாக்ஷி அகர்வால் கூறியபொழுது, “சொகுசு கார் வாங்குவது எனது தந்தையின் 22 ஆண்டு கனவாகும். இது தற்பொழுது நினைவாகி உள்ளது. புதிய மெர்சிடிஸ் E வகுப்பு காரை வாங்கியுள்ளார். இது அவருடைய வாழ்க்கையின் சந்தோஷமான தருணம் என்று கூறியுள்ளார்.

மேலும் என்னுடைய இந்த வெற்றி உலகத்தில் உள்ள ஒவ்வொருவரின் கனவுகளை நிறைவேற்ற உதவியாக  இருக்கும் . என்னால் இந்தக் கனவை நினைவாக்க முடியுமென்றால் ஒவ்வொருவராலும் முடியும்” என சாக்ஷி அகர்வால் கூறியுள்ளார்.

Categories

Tech |