22 சிறுமிகளை சீரழித்த வாலிபர் தற்போது தனக்கு ஆண்மையை நீக்குமாறு சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த நர்சரி ஊழியரான ஆரோன் கோலிஸ்( 34) என்பவர் சிறுமிகளை சீரழித்த வழக்கில் கடந்த 2009 ஆம் வருடத்திலிருந்து சிறையில் உள்ளார். குழந்தை ஒன்றுக்கு இனிப்பு கொடுத்து சீரழித்ததுடன், அதை விடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் சிக்கிய அவர், மொத்தம் 22 சிறுமிகளை சீரழித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து உளவியல் தொடர்பான சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் கோலிஸ் உள்ளார்.
ஆனால் தற்போது அவருக்கு ஆண்மையை நீக்கும் அறுவை அளிக்கும் சிகிச்சை செய்யவேண்டும் எனவும், அது மட்டுமே தமக்கு சிறையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படும் ஒரே வழி என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அந்த ஆண்மை சிகிச்சை செய்ய சுமார் 20 ஆயிரம் பவுண்டுகள் செலவாகும் என்று கூறப்படுகிறது.
இதுவரை பொது சிறைக்கு அனுப்பப்படாத நிலையில் தற்போது அவரை தனி சிறையில் இருந்தபோது பொது சிறைக்கு மாற்ற நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இதையடுத்து தனக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கொண்டே இருக்கிறார். ஆனால் ஆண்மை நீக்கம் செய்வதால் உரிய பலன் கிடைக்குமா என்பதற்கான சந்தேகம் நிபுணர்களிடம் எழுந்துள்ளது. அந்த சிகிச்சையால் மட்டுமே தான் இனி வெளியுலகை நல்லமுறையில் காண முடியும் எனவும், அதனால் கண்டிப்பாக பாலியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்றும் கோலிஸ் நம்புவதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி சிறையில் அடைக்கப்படும் சிகிச்சையால் நமக்கு எவ்வித பலமும் பலனும் கிடைக்கவில்லை. அதனால் உளவியல் ரீதியாக எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று கோலிஸ் உறுதியாக கூறியுள்ளார்.