தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொது தேர்வு எழுதும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் மாணவியர், ஆசிரியருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 22 மாணவியர்களுக்கும், 2 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.