Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

22-வது வருடம் தொடக்கம்…. ஈரோடு BSNL வாடிக்கையாளர்களுக்கு…. “329 ரூபாயில் அதிவேக இணையதள இணைப்பு”….!!!!!!

22 ஆவது தொடக்க விழாவை முன்னிட்டு ஈரோடு தொலை தொடர்பு மாவட்ட வாடிக்கையாளர்களுக்கு 329 ரூபாய் கட்டணத்தில் அதிவேக இணையதள இணைப்பு வழங்கப்படுவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

ஈரோடு பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு மாவட்ட பொதுநிலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, பிஎஸ்என்எல் நிறுவனம் சென்ற 2000 வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது. தற்பொழுது பிஎஸ்என்எல் 22 வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனால் பல்வேறு சலுகைகளை பொதுமக்களுக்கு அறிவித்து இருக்கின்றது. மிகவும் குறிப்பாக ஈரோடு தொலை தொடர்பு மாவட்ட வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணையதள இணைப்பு அதாவது பைபர் கேபிள் இணைப்பு 329 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படுகின்றது.

இந்த சேவையானது கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் இந்த இணைப்பு வழங்கப்படும். மிக விரைவில் இந்த சேவை மூலமாக ஓடிடி திரைத்தளங்களையும் மிக குறைந்த கட்டணத்தில் பெறலாம். இந்த இணைப்பானது வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி வரை 369 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படுகின்றது. ஆகையால் இந்த இணைப்புகள் பெற விரும்புவர்கள் www.bookmyfiber.bsnl.co.in என்ற இணையதள முகவரியிலும் 9486617222 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு கோரிக்கையை அனுப்பினால் உடனடியாக சம்பந்தப்பட்ட பிஎஸ்என்எல் அதிகாரிகள் தொடர்பு கொண்டு இணைப்புகள் வழங்குவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |