Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

22 வயது….. 50 விக்கெட்டுகள்…. சர்வதேச டி20 போட்டிகளில் ஷாஹீன் அஃப்ரிடி புதிய சாதனை..!!

22 வயது மற்றும் 211 நாட்களில், ஆட்டத்தின் மிகக் குறுகிய வடிவத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் அப்ரிடி..

ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷதாப் கான்  22 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 52 ரன்களும், இப்திகார் அகமது  35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 51 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 9 ஓவர் முடிவில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வந்த போது, மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென்னாபிரிக்க அணி வெற்றி பெற 14 ஓவரில் 142 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 14 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் வேக பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி சிறப்பாக பந்துவீசி 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அஃப்ரிடி ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது இளம் வயதில் (22 வயது 211 நாட்கள்)  50 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

இதன்மூலம் அவர் 23 வயது 144 நாட்களில் முதலிடம் பிடித்து இந்த சாதனையை நிகழ்த்தியிருந்த ஆஸ்திரேலியாவின் மகளிர் அணி வேகப்பந்து வீச்சாளர் எலிஸ் பெர்ரியை பின்னுக்குத் தள்ளினார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 4ஆவது இளம் பந்துவீச்சாளரானார். அப்ரிடி. இந்த பட்டியலில் ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), ஸ்டெபானி டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்), தீப்தி சர்மா (இந்தியா) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ள நிலையில், அந்த வரிசையில் இணைந்து டி20 வரலாற்றில் நான்காவது இளம் பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அப்ரிடி பெற்றார்.

 

Categories

Tech |