ரசிகர்கள் நயன்தாராவுடனான திருமண அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் விக்னேஷ் சிவனின் போஸ்ட் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவும் நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனருமான விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். இவர்கள் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் நிலையில் ரசிகர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணத்தை எதிர்பார்த்து இருக்கிறார்கள். இவ்வாறு இருக்க விக்னேஷ் சிவன் துபாய்க்குச் சென்று நயன்தாராவுடன் புத்தாண்டை கொண்டாடும் போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
மேலும் 22 பிப்ரவரி மாதம் 2022ஆம் தேதியில் யாரெல்லாம் திருமணம் செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி நான் அதை வீணடிக்க விரும்பவில்லை என்றும் பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட்டை கண்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் அந்த தேதியில் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் திருமணம் நடக்கப் போகுது என்று நினைத்துள்ளார்கள். ஆனால் விக்னேஷ் சிவன் தற்போது நயன்தாராவுடன் சேர்ந்து பயணம் செய்வதை மிஸ் பண்ணுவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் விக்னேஷ் சிவன் மீது கொந்தளித்துள்ளார். அதாவது 22.2.2022 தேதி பற்றிய போஸ்ட் எல்லாம் சும்மாதானா என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேலும் தலைவி பாவம் அவரை கைவிட்டு விடாதீர்கள் என்றும் விக்னேஷ்ஸின் போஸ்டிற்க்கு கமெண்ட் செய்துள்ளார்கள்.