Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை…. பாஸ்வேர்ட் சொன்னால்தான் திறக்கும்…. அதிகாரிகளின் தீவிர விசாரணை…!!

22 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை வேனில் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்ன கந்திலி அருகே தேர்தலுக்காக அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது டைட்டன் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு மினி வேனில் 22 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து துப்பாக்கி ஏந்திய காவலர் உடன் இந்த நகைகளை திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் இருக்கும் நகை நகை கடைகளில் சப்ளை செய்வதற்காக கொண்டு சென்றது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

மேலும் அதிகாரிகள் வேனின் பூட்டை திறக்க முயற்சித்தும் முடியவில்லை. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்ட போது அதனுடைய பாஸ்வேர்டை சொன்னால் மட்டுமே பூட்டை திறக்க முடியும் என்று கூறியுள்ளனர். அதோடு நகைகளுக்கான உரிய ஆவணம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்லப்பட்ட 22 கோடி மதிப்பிலான தங்க நகையை எடுத்து சென்றதால் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |