சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 22 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்த நிலையில், கோடம்பாக்கத்தில் 461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரு.வி.க நகரில் – 448, ராயபுரம் – 422, அண்ணா நகர் – 206, தேனாம்பேட்டை – 316, தண்டையார் பேட்டை – 184, வளசரவாக்கம்- 205, அம்பத்தூர் – 105, அடையாறு- 107 என இந்த பகுதிகள் அதிகம் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் கோடம்பாக்கம் பகுதியில் 400 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோடம்பாக்கம் பகுதியில் 22 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் மாநகராட்சியினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.