220 ஆவது முறையாக தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் வரும் 4ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் சேலம் ஆத்தூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் 220 வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாலும் ஒரு காலத்திலும் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பது என் எண்ணம். தேர்தலில் வைப்பு தொகையாக இதுவரை 50 லட்சம் வரை கட்டியதாகவும் நாளை 220 ஆவது முறையாக வேட்புமனுவை புதுச்சேரியில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.