Categories
மாநில செய்திகள்

தமிழக சாலைகளை மேம்படுத்த ரூ. 2200 கோடி சிறப்பு நிதி ஒதிக்கீடு‌…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 19-ம் தேதி பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள், 2016-17 ஆம் ஆண்டுக்குப் பிறகு சீரமைக்கப்படாத சாலைகள் போன்றவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி 2200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீட்டில் 4600 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார். அதன் பிறகு சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து ரூ. 7,338 கோடி மதிப்பீட்டில் 16,390 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில் வருகிற 4 வருடங்களில் தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதி 2200 கோடி மற்றும் இதர திட்ட நிதிகளை ஒருங்கிணைத்து‌ 9,588 கோடி நிதியில் 20,990 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி முதல் கட்டமாக அடுத்த வருடத்தில் 5,140 கோடி நிதி ஒதுக்கப்படும். இதில் 12,061 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலைகள் மேம்படுத்தப்படும்.

இதனையடுத்து சென்னை மாநகராட்சி பகுதியில் ரூ. 1,171 கோடி மதிப்பீட்டில் 1,680 கிலோமீட்டர் சாலைகளும், 2,535 கோடி மதிப்பீட்டில் நகராட்சி பகுதிகளில் உள்ள 7,116 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலைகளும், ரூ. 1,434 கோடி மதிப்பீட்டில் பேரூராட்சி பகுதிகளில் 3,265 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலைகளும் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அடுத்து வரும் 2 வருடங்களுக்குள் மீதமுள்ள சாலைகளும் மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சாலைகள் அனைத்தும் தரமான முறையில் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதோடு, இந்த பணிகளின் ஒருங்கிணைப்பு அமைப்பாக தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் வுட் கட்டமைப்பு அமைப்பு கழகம் நிறுவப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

Categories

Tech |