Categories
அரசியல் மாநில செய்திகள்

22,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க…. தொழிற்சாலைகள் அமைக்கப்படும் – மு.க ஸ்டாலின்…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஜூன்-21ஆம் தேதி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்த ஸ்டாலின் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி. ஆளுநர் உரை டிரெய்லர் தான். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

தமிழகத்தில் ஆக்சிஜன் இல்லை, மருந்து இல்லை என்ற சூழலே இல்லாத நிலை உருவாகிவிட்டது. மேலும் மீத்தேன், நியூட்ரினோ, சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை திட்டங்களை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெறப்படும். வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களான செய்யாறு, திண்டிவனத்தில் 22,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |