இந்தியாவில் 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதால் சீன அரசு கலக்கத்தில் இருக்கின்றது.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை பப்ஜி மற்றும் வீசாட் உள்ளிட்ட 118 சீனஸ் எலிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதனால் தற்போது வரை மொத்தம் 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. சீனாவின் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் இந்த அதிரடித் தாக்குதலால் சீனா பெரும் கலக்கத்தில் இருக்கின்றது. இதுகுறித்து சீன வர்த்தகத் துறை அதிகாரி காவ் பெங் கூறுகையில், ” இந்தியா சீன நிறுவனங்கள் மீது பாரபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கைகள் உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளுக்கு எதிரானவை. இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியை பராமரிக்க இந்திய தரப்பு சீனாவுடன் சேர்ந்து செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் சீன நிறுவனங்கள் உள்ளிட்ட சேவை வழங்குபவர்களுக்கு திறந்த மற்றும் நியாயமான வணிக சூழலை உருவாக்க இயலும். இது இந்தியா மற்றும் சீனா இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் அதிக அளவு நன்மைகளை ஏற்படுத்தும்” என்று அவர் கூறியுள்ளார்.